

இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இந்துக்கடவுளான அனுமனைக் குறித்து பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் இந்தியாவின் முதல் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக வாரணாசி உருவாகி வருகிறது. இதில், கதை நாயகனாக மகேஷ் பாபுவும் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லனாக பிருத்விராஜ்-ம் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பெயர் டீசர் அண்மையில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்றது.
டீசர் வெளியீட்டு நிகழ்வில் எஸ். எஸ். ராஜமௌலி பெயர் டீசரை அகண்ட திரையில் வெளியிட முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், குழப்பங்கள் எழுந்ததும் மேடையில் ஏறிய ராஜமௌலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், என் அப்பா எப்போதும் நான் அனுமனால் ஆசிர்வதிக்கப்பட்டு வருவதாகக் கூறுவார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்கு கடுமையாக கோபம் வந்தது. இப்படித்தான் அனுமன் எனக்கு உதவுவானா? என் மனைவியின் நண்பன் அனுமன் இந்த முறையாவது எனக்கு இதைச் சரிசெய்வானா?” என்றார்.
வாரணாசி எங்கிற பெயரில் ராமாயணக் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் டீசர் நிகழ்வில் ராஜமௌலி இப்படி பேசியது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ராஜமௌலி இந்துக் கடவுளான அனுமனை அவமதித்து விட்டதாக ஹைதராபாத்திலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இந்து அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக, விசாரணை நடைபெறுமா இல்லை ராஜமௌலி இதுகுறித்து விளக்கமளிப்பாரா என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் மேலாளர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.