தண்டகாரண்யம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் செப்.19 ஆம் தேதி வெளியானது.
இதில் நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மலைவாழ் மக்களுக்கும் அதிகார அமைப்பிற்கும் இடையான மோதலை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியிருந்தது.
திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில், தண்டகாரண்யம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.