

நடிகர் தனுஷ் மேலாளர் குறித்த சர்ச்சை கருத்துக்கு நடிகை மன்யா ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகையான மன்யா ஆனந்த் நேர்காணல் ஒன்றில், “நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். பின், அவரே ஒப்பந்தமானால் சில உடன்பாடுகள் இருக்கும் என்றார்.
என்னால் படுக்கைக்கு எல்லாம் வர முடியாது என கறாராகச் சொன்னேன். உடனே, அவர் நாயகன் தனுஷ் ஆக இருந்தாலுமா? என்றார். எப்படி இப்படி வெளிப்படையாக கேட்க முடிகிறது என அதிர்ச்சியாக இருந்தது” எனத் தெரிவித்தார். மேலும், அந்த நேர்காணலில், “இது உண்மையிலேயே தனுஷ் அணியிலிருந்து வந்த அழைப்பதுதானா என்பதும் தெரியவில்லை” என்றார்.
இது திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், கடந்தாண்டு தனுஷ் மேலாளர் ஸ்ரேயஸ், ”நடிகர் தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக என் பெயரையும் தொடர்பு எண்ணையும் பயன்படுத்தினால் அது போலியானது. அதில் உண்மையில்லை” என பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மன்யாவின் இந்த நேர்காணல் விடியோ வைரலானதும் தனுஷுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பதிவுகள் வெளியாகின.
இந்த நிலையில், மன்யா ஆனந்த் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நான் பேசிய நேர்காணலிலேயே வாய்ப்பு தருவதாக அழைத்த நபர், உண்மையிலேயே தனுஷ் குழுவைச் சேர்வந்தரா எனத் தெரியவில்லை என்பதையும் குறிப்பிட்டிருப்பேன். ஆனால், முழுமையாக விடியோவை பார்க்காமல் தவறான செய்திகள் பரவி வருகின்றன. தயவு செய்து இதனைச் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தனுஷ் மேலாளர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.