நான் எங்கு இருக்கிறேன்? ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ

பாரிஜாதம் தொடரில் நடித்து வரும் நடிகை ஆல்யா மானசா புதிதாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆல்யா மானசா
ஆல்யா மானசாபடம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

பாரிஜாதம் தொடரில் நடித்து வரும் நடிகை ஆல்யா மானசா புதிதாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் இருக்கும் இடம் எது என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சின்ன திரை நடிகை ஆல்யா மானசா கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த துபைக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு தனது குடும்பத்துடன் ஓய்வு நாள்களை செலவழித்தார்.

கணவருடன் துபையின் மிகவும் முக்கியமான கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கணவர் மற்றும் குடும்பத்துடன் ஆல்யா மானசா
கணவர் மற்றும் குடும்பத்துடன் ஆல்யா மானசாபடம் - எக்ஸ்

தற்போது மெட்ரோ ரயிலில் நின்றவாறு பயணிக்கும் விடியோவை பகிர்ந்து, நான் எங்கிருக்கிறேன் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காடிச்யில் பாரிஜாதம் தொடரில் நாயகியாக நடித்துவரும் ஆல்யா மானசா, சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருந்த ஆல்யா, குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் நோக்கத்தில் துபைக்குச் சென்றுள்ளார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆல்யாவை ரசிகர்கள் பலர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் அவர் துபையில் இருப்பது அவரின் ரசிகர்கள் அறிந்த விஷயமாகவே உள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் இருந்தவாறு நான் எங்கு இருக்கிறேன் என ஆல்யா வெளியிட்ட விடியோவிலும், துபையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸுக்குப் பிறகு... பவித்ரா ஜனனியின் புதிய தொடர்!

Summary

parujadham serial actress Alya manasa dubai video goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com