

துபை, அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். நடிகர்கள் ரஜினி, விஜய், சூர்யா, நானி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
மகாநடிகை என்ற படத்துக்காக தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், சாணி காகிதம், ரகுதாத்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் விளம்பரப் பணிகளில் கீர்த்தி சுரேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி சுரேஷிடம் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகதான் இருக்கிறது. துபை, அமெரிக்காவைப் போன்ற பாதுகாப்பு இங்கு இல்லை. துபை செல்லும்போது பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கிறது. அங்கிருக்கும் சட்டம் அதுமாதிரி இருக்கின்றது. இங்கேயும் கண்டிப்பாக அதுபோன்று மாறிதான் ஆக வேண்டும்” என்றார்.
மேலும், டீப் - ஃபேக், ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு பற்றி பேசிய கீர்த்தி சுரேஷ்,
“நான் ட்விட்டர் பக்கமே செல்வதில்லை. எதிர்மறையான கருத்துகளை தவிர்த்து வருகின்றேன். ஏஐ பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. மனிதர்கள் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மனிதர்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களில் பார்க்கும்போது நான் இதுபோன்று உடை அணிந்தேனா? என்று எனக்கே கேள்வி எழும். அந்த அளவுக்கு புகைப்படங்களை அசல் போன்று ஏஐ உருவாக்குகிறது.
உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா எனக் கேட்க தோன்றும். அவர்கள் இதையேதான் வேலையாக வைத்துள்ளார்கள் என்றால் என்ன செய்ய முடியும்? வாழு, வாழ விடு.
சமூகத்தின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து படிக்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு நெருக்கமாக உள்ள சினிமா மூலம் பெண்கள் பாதுகாப்புக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகின்றேன்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.