

ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி மொழிப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட் (HOMEBOUND)’ என்ற ஹிந்தி திரைப்படம் அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது.
இந்தப் படம் சமீபத்தில் நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச மக்கள் விருதுக்கான 2-வது இடத்தைப் பிடித்தது.
தர்மா புரடக்ஷன் சார்பாக உருவான ‘ஹோம்பவுண்ட்’ படம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
நீரஜ் கவான் இயக்கத்தில் உருவான ‘ஹோம்பவுண்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் நாளை(நவ. 21) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதையும் படிக்க: வெளியான சசிகுமார் - சூர்யா சேதுபதியின் நடுசென்டர் இணையத் தொடர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.