இத்தாலியின் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற அஜித் குமார்!

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் வென்ற இத்தாலிய விருது குறித்து...
Shalini with Ajith Kumar, who won the Gentleman Driver Award.
ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற அஜித் குமார் உடன் ஷாலினி. படம்: இன்ஸ்டா / ஷாலினி அஜித்குமார்
Published on
Updated on
1 min read

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமாருக்கு இந்தாண்டின் ஜென்டில்மேன் ஓட்டுநர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வழங்கப்பட்ட இந்த விருது குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் குமார் சினிமாவை தாண்டி தனக்கு மிகவும் பிடித்த கார் பந்தயத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிட்டு நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியுள்ளதாவது:

தொழில்முனைவோர், கார் ரேஸராக இருந்த பிலிப்பே சாரியோல் சார்பாக வெனிஸில் வழங்கப்படும் இந்தாண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது வென்ற எனது கணவரின் பக்கத்தில் நிற்க பெருமைப்படுகிறேன் என்றார்.

சமீபத்தில் இந்தியாவின் பத்மபூஷன் விருதை அஜித் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவில் நடைபெற்ற கார் பந்தயத்திலும் அஜித்தின் அணி சாதனை படைத்தது.

இப்படி தொடர்ச்சியாக விருதுகளை வாங்கிக் குவிக்கும் அஜித்தால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 64 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Shalini Ajith Kumar took to Instagram to share the news, in which she is seen posing alongside her husband and children at the award ceremony in Italy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com