நாக சைதன்யா பிறந்த நாளில் 24-ஆவது படத் தலைப்பு அறிவிப்பு!

நடிகர் நாக சைதன்யாவின் 24-ஆவது படத்தலைப்பு குறித்து...
Naga Chaitanya 24th film Title Reveled.
நாக சைதன்யாவின் 24-ஆவது பட போஸ்டர். படம்: எக்ஸ் / நாக சைதன்யா.
Published on
Updated on
1 min read

நடிகர் நாக சைதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 24-ஆவது படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் இந்திய திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் வர்மா தண்டு இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கான திரைக்கதையை சுகுமார் எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா, சுகுமார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.

கடைசியாக நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் நடித்த தண்டேல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.

புராணக்கதை தொடர்பான புதிய படத்தில் (என்சி24) நடித்து வருகிறார். இதன் மேக்கிங் விடியோ பிரமிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘விருஷகர்மா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Summary

The title of actor Naga Chaitanya's 24th film has been announced on the occasion of his birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com