ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ரஜினி - 173 இயக்குநர் இவரா?

ரஜினி - 173 இயக்குநர் குறித்து...

News image

நடிகர் ரஜினிகாந்த்

Updated On :23 நவம்பர் 2025, 1:14 pm IST

நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய திரைப்பட இயக்குநர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது திரைப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அடுத்த சில நாள்களிலேயே கனத்த இதயத்துடன் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி அறிவிப்பை வெளியிட்டார். திடீர் அதிர்ச்சியாக இது அமைந்தது.

இதனால், தலைவர் 173 திரைப்படத்தின் இயக்குநர் யார் என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், பார்க்கிங் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிகர் ரஜினியிடம் கதை சொன்னதாகவும் அதன் மையக்கரு அவருக்குப் பிடித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மகாராஜா திரைப்படம் மூலம் இந்தியளவில் பேசப்பட்ட இயக்குநர் நித்திலனும் ரஜினிக்கு கதை சொன்னதாகக் கூறப்படுகிறது. இருவரில் யார் ரஜினியுடன் இணைவார் என்பதை ரஜினியின் பிறந்த நாளான டிச. 12 அன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

reports suggests director ramkumar balakrishnan directs actor rajinikanth 173th movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.