நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜித்தின் சில கார் பந்தயங்கள் முடிவடைந்ததும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ஏகே - 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் துவங்கும். தற்போது, இப்படத்திற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருகிறோம். குட் பேட் அக்லி திரைப்படத்துக்குப் பின் மீண்டும் அஜித் சாருடன் இணைந்துள்ளது எனக்கு சிறப்பு அனுபவமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வரவேற்பைப் பெறும் எகோ... கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.