

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் விடியோ மூலம் தோன்றி போட்டியாளர்களை அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாள்களைக் கடந்துள்ளது. நேற்று நடைபெற்ற வார இறுதி நாள் நிகழ்வில், மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளைப் பெற்ற கெமி, பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
நேற்றைய நிகழ்வு முடியும்போது, போட்டியின் தொகுப்பாளராக உள்ள விஜய் சேதுபதி, 50 நாள்கள் நிறைவு செய்துள்ள உங்கள் அனைவருக்கும் நாளை ஒரு சப்ரைஸ் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் அவர்களின் விளையாட்டு குறித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பேசும் விடியோ தனித்தனியாக திரையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிரஜனுக்கு அவரது நண்பரான நடிகரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளருமான ஆரி அறிவுரை வழங்கியுள்ளார். ஆரியின் விடியோவில், “நீ சொன்னதை எதுவும் செய்யவில்லை. இந்த நிகழ்ச்சியில் உனது அனுபவத்தைக் காட்டாமல் வாழ்க்கையில் எங்கு காட்டப் போகிறாய்.” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனிக்கு அவரது சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி அகத்தியன், “மற்றவர்களை வெற்றிபெற வைக்க வந்த உதவி கதாபாத்திரமா நீ? இல்ல, வெற்றியாளராகும் நாயகியா நீ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமரூதினுக்கு அவரது நண்பரும் சின்னத்திரை நடிகருமான ஆரியன் அறிவுரை வழங்கியுள்ளார். அவர், “இந்த விளையாட்டைத் தனியாக விளையாடினால், பைனல் மேடையில் நிற்பதற்கான அனைத்து தகுதியும் உனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மற்ற போட்டியாளர்களுக்கும் அவரவர் உறவினர்களும், நண்பர்களும் போட்டியில் முன்னோக்கிச் செல்வதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.