

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் கமருதீனின் ஆட்டம் பாதிக்கப்படுமானால், விலகிக்கொள்கிறேன் என விஜே பார்வதி தெரிவித்துள்ளார்.
அரோரா - கமருதீன் இடையிலான நட்புக்கு தான் தடையாக இருக்க மாட்டேன் எனவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சிசன் 9 நிகழ்ச்சி 8 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தைப்போன்றே இந்த வாரத்திற்கும் எஃப்.ஜே. கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமருதீன் - விஜே பார்வதி இடையே நல்ல புரிதல் இருந்ததால், இருவரும் தங்கள் உணர்வுகளை பரஸ்பரமாக பகிர்ந்துகொண்டனர். பிக் பாஸ் வீட்டில் அனைவருமே போட்டியாளர்களாக உள்ள நிலையில், கமருதீனை தனது நெருங்கிய நண்பராக விஜே பார்வதி கருதினார்.
எனினும் ஒருசில இடங்களில் கமருதீனின் ஆட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பார்வதி செயல்பட்டதாக ரசிகர்கள் கருதுவதுண்டு. இதனால் விஜே பார்வதியிடமிருந்து கமருதீன் விலகியிருந்தார்.
துஷார் வெளியேற்றப்பட்டதில் இருந்து அரோராவுடன் நல்ல பிணைப்பில் கமருதீன் இருந்து வருகிறார்.
இருவரும் ஒருவருக்கொருவர் பிக் பாஸ் வீட்டில் பக்க பலமாக உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி கமருதீனின் செயல்களால் வருந்தினார்.
கமருதீன் மீதான அன்பு உன்னுடைய தனிப்பட்ட போட்டியை பாதிக்கும் என அமித் பார்கவ் எச்சரித்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத பார்வதி, தொடர்ந்து வாதங்களை முன்வைத்துப் பேசினார்.
கானா வினோத்தும் இதில் கருத்து கூறியதால், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பார்வதி, தன்னால் கமருதீன் போட்டி பாதிக்கப்படுமானால், அவனிடமிருந்து விலகிக்கொள்கிறேன் என ஆதங்கத்துடன் பேசினார். இந்த விடியோ ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பள்ளிக்கூடமாக மாறிய பிக் பாஸ் வீடு! மாணவர்களாக மாறிய போட்டியாளர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.