

நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வியே தமிழ்த் திரையுலகில் சமீபமாக எழுப்பப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்கி, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவிருந்த நிலையில், படத்திலிருந்து சுந்தர் சி விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து, ரஜினி 173 படத்தின் இயக்குநர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணாவிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளதாகவும், அவருக்கு கதை பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
கல்லூரி மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் பேராசியராக ரஜினி வருவதுபோலவும் ராம்குமார் பாலகிருஷ்ணாவின் கதை கூறியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்தப் படத்துக்காக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணாவுக்கு ரூ. 10 கோடி சம்பளம் வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ரஜினிகாந்த் - ராம்குமார் பாலகிருஷ்ணா கூட்டணி குறித்த பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும்நிலையிம், அதிகாரப்பூர்வ அறிவிப்போ உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்போ எதுவும் பெறப்படவில்லை.
இதையும் படிக்க: நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.