நடிகர் பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே. திரைப்படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “எல்.ஐ.கே.”.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, கிருத்தி ஷெட்டி, சீமான், ஷாரா, கௌரி கிஷன், மாளவிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின், தீமா எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில் “பட்டூமா” எனும் இரண்டாவது பாடல் இன்று (நவ. 27) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்.17 ஆம் தேதி எல்.ஐ.கே. திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.