ஓடிடியில் விஷ்ணு விஷாலின் ஆர்யன்!

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து...
Poster of the movie Aaryan.
ஆர்யன் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / விஷ்ணு விஷால்.
Updated on
1 min read

நடிகர் விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படம் தற்போது ஓடிடியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இறுதியாக நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ”கட்டா குஸ்தி” எனும் திரைப்படம் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ”லால் சலாம்” மற்றும் ”ஓஹோ எந்தன் பேபி” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான “ஆர்யன்” கடந்த அக்டோபர் 31-இல் வெளியானது.

இந்தப் படத்தில் செல்​வ​ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ​நாத், மானசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

Poster of the movie Aaryan.
ஆர்யன் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / விஷ்ணு விஷால்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Summary

Actor Vishnu Vishal's film 'Aaryan' is currently released on OTT in pan-Indian languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com