காந்தாரா படம் பார்க்கும்போது சாமியாடிய பெண்..! வைரல் விடியோ!

திரையரங்கில் காந்தாரா படத்தைப் பார்க்கும்போது சாமியாடிய பெண் குறித்து...
Woman in Transe state while watching film. Kantara poster (center).
சாமியாடிய பெண். காந்தாரா போஸ்டர் (நடுவில்). படங்கள்: எக்ஸ் / கஸ் எக்ஸ், ஹொம்பாலே ஃபிலிம்ஸ்.
Published on
Updated on
1 min read

கார்நாடகத்தில் திரையரங்கு ஒன்றில் காந்தாரா படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் சாமியாடிய விடியோ வைரலாகி வருகிறது.

நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று (அக்.2) பிரம்மாண்டமாக வெளியானது.

கார்நாடகத்தில் ஹவேரி எனும் நகரத்தில் உள்ள மாகவி எனும் திரையரங்கில் காந்தாரா படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் சாமியாடிய விடியோ வைரலாகி வருகிறது.

காந்தாரா படத்தில் தெய்வீக அம்சம் நிறைந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. முதல் பாதியும் அதனாலேயே வென்றது.

இந்நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பாக வரும் முக்கியமான ஒரு காட்சியைப் பார்க்கும்போதுதான் அந்தப் பெண்ணுக்கு சாமியாடியதாகக் கூறப்படுகிறது.

திரையரங்கில் இந்த நிகழ்வைக் கண்ட அனைவரும் தெய்வீகத்தின் பிரதிபலிப்பு என அதிர்ச்சியடைந்தார்கள்.

பின்னர், அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து அமைதிப்படுத்தினார்கள். இந்த விடியோ சமூக வலைதளதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2022-இல் காந்தாரா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் முன்கதையாக உருவாகியுள்ள காந்தாரா சேப்டர் 1 திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம், கிஷோர், பிரமோத் ஷெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

நல்ல வரவேற்பைப் பெறும் இந்தப் படம் ரூ.1000 கோடி வசூலிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

A video of a woman shouting while watching the movie Kantara Chapetr 1 in a theater in Karnataka is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com