கடலில் மூழ்கிய படகு... மண்டாடி படப்பிடிப்பில் விபத்து!

மண்டாடி படப்பிடிப்பில் விபத்து...
சூரி
சூரி
Updated on
1 min read

நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் மண்டாடி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விடுதலை, மாமன் திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மண்டாடி. மதிமாறன் இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் கடற்கரை பகுதியில் படமாக்கப்பட்டபோது கடலிலிருந்தபடி ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

அப்போது, எதிர்பாராத நேரத்தில் எழுந்த அலையால் படகு கடலில் மூழ்க ஆரம்பிக்க, ஒளிப்பதிவு குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், ரூ. 1 கோடி மதிப்பிலான கேமரா மற்றும் லென்ஸ்கள் நீரில் மூழ்கின.

நல்வாய்ப்பாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மேலும், இந்தச் சம்பவத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Summary

accident happened in actor soori's mandaadi movie shoot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com