நடிகர் கவின் நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவின் நடிப்பில் இறுதியாக கிஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் வழங்கும் மாஸ்க் திரைக்கு வருகிறது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கியுள்ளார். நாயகியாக ருஹானி ஷர்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தின் முதல் பாடலான ஆலங்கட்டி அக். 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக சுவாரஸ்யமான புரோமோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்பாடலை சுப்லாஷ்னி பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.