நேரடியாக ஓடிடி வெளியீடாகும் அருள்நிதியின் புதிய பட டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான ராம்போ திரைப்படம் அக். 10 ஆம் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
இதில், தன்யா ரவிச்சந்திரன், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். அருள்நிதி நடிப்பில் இறுதியாக வெளியான டிமாண்டி காலனி - 2 பெரிய வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.