
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் ரஷ்மிகா மந்தனாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் விஜய் தேவரகொண்டாவுக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கும் ரஷ்மிகா மந்தனாவுக்கும் வெள்ளிக்கிழமையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வந்த நிலையில், இருவரின் நிச்சயதார்த்தம் ஹைதராபாதில் நடைபெற்றதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இருப்பினும், இருவரின் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
இதையும் படிக்க: ‘நிர்வாணப் படத்தை அனுப்பு’: அக்ஷய் குமார் மகளிடம் ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.