நடிகர், நடிகைகள் கலந்துகொண்ட 80’ஸ் ரீயூனியன் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் 1980-களில் நடித்து கவனம்பெற்றவர்கள் ஆண்டுதோறும் சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர். இதில், 80-களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்கள் கலந்துகொண்டு பழைய நினைவுகளைப் பகிர்ந்து உற்சாகமாகின்றனர்.
அந்த வகையில், இந்தாண்டிற்கான 80’ஸ் ரீயூனியன் (80’s reunion) நிகழ்வு சென்னையில் நேற்று (அக்.4) நடைபெற்றது.
இதில், நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ், பாக்யராஜ், சரத்குமார், ஜாக்கி ஷெரிஃப், ரேவதி, குஷ்பு, சுஹாசினி. நதியா, மீனா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வித்தியாசமான ஆடைகளுடன் ஆடல், பாடல், நடனமென நடிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இதையும் படிக்க: சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.