பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நுழைந்துள்ளவர்கள் நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர்கள் அல்ல என சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
திவாகர் / வியானா
திவாகர் / வியானா
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நுழைந்துள்ளவர்கள் நிகழ்ச்சிக்கு பொருத்தமானவர்கள் அல்ல என சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சில் பெரும்பாலும் ஏதேனுமொரு திறமையின் அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.

அந்தவகையில் கடந்த 8 சீசன்களின் போட்டியாளர்களை ஒப்பிடும்போது இந்த சீசனில் பங்கேற்றுள்ளவர்கள் தகுதியானவர்கள் அல்ல என்பதைப் போன்ற கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று (அக். 5) பிரமாண்டமாகத் தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இந்தமுறை போட்டியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் 9 போட்டியாளர்கள்
பிக் பாஸ் 9 போட்டியாளர்கள்படம் - எக்ஸ்

முதல் நாளான இன்று பிக் பாஸ் வீட்டிற்கு பொருத்தமில்லாதவர்களாக நீங்கள் நினைக்கும் இருவரை தேர்வு செய்ய பிக் பாஸ் உத்தர்விடுகிறார். ஒருநாள் கூத்து என்ற பெயரில் தகுதியில்லாத போட்டியாளர்களுக்கு சக போட்டியாளர்கள் வாக்களிக்கின்றனர்.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் இருவரைத் தேர்வு செய்கின்றனர். அதிக வாக்குகளைப் பெற்று திவாகர் மற்றும் வியானா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு பொருத்தமில்லாத நபர்களாகத் தேர்வாகியுள்ளனர். இது தொடர்பான முன்னோட்டமும் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

Summary

Doctor Diwakar viyana unfit for bigg boss 9 promo

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com