நடிகர் ஹரிஷ் கல்யாண் திரைப்படத்தில் வெற்றி மாறன் பங்களிப்பு செய்துள்ளார்.
இயக்குநர் சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான டீசல் திரைப்படம் அக். 17 அன்று வெளியாகிறது.
பார்க்கிங், லப்பர் பந்து வெற்றிகளைத் தொடர்ந்து ஹரிஷ் நடித்த படமென்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இப்படத்தின் பாடல்களும் ஹிட் அடித்துள்ளதால் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தின் கதைச் சுருக்கத்தை சொல்லும் வாய்ஸ் ஓவருக்கு குரல் கொடுத்துள்ளார்.
தன் திரைப்படங்களில் வெற்றி மாறன் இந்த பாணியைப் பயன்படுத்தி வந்தார். தற்போது, ஹரிஷ் கல்யாணுக்காக டீசல் படத்திற்கும் குரல் கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க: மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணிருக்காரு: துருவ் விக்ரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.