கவினின் மாஸ்க் படத்தின் முதல் பாடல்!

மாஸ்க் படத்தின் முதல் பாடல் வெளியீடு.
கவின்
கவின்
Updated on
1 min read

கவினின் மாஸ்க் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நடிகர் கவின் நடிப்பில் இறுதியாக கிஸ் திரைப்படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் வழங்கும் மாஸ்க் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கியுள்ளார். நாயகியாக ருஹானி ஷர்மாவும் பிரதான கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மாஸ்க் படத்தின் முதல் பாடலான கண்ணுமுழி பாடல், இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடலை இதுவரை 2.30 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்பாடலை சுப்லாக்ஷினி, அந்தோணி தாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.

Summary

The first song from Kavin's film Mask has been released online and is attracting the attention of fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com