பெற்றோர் இல்லாத வாழ்வு கொடூரமானது: பிக் பாஸில் நந்தினி உருக்கம்!

பெற்றோர் இல்லாத வாழ்வு மிகவும் கொடூரமானது என யோகா ஆசிரியரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான நந்தினி கூறியது குறித்து...
நந்தினி
நந்தினிபடம் - எக்ஸ்
Published on
Updated on
2 min read

பெற்றோர் இல்லாத வாழ்வு மிகவும் கொடூரமானது என யோகா ஆசிரியரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான நந்தினி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெற்றோர் இன்றி தான் சந்தித்த இன்னல்கள் குறித்து நந்தினி பேசியது, சக போட்டியாளர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக். 5ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதையைக் கதையாகக் கூறும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று போட்டியாளர்கள் தங்கள் கடந்து வந்த பாதையை விவரிக்க வேண்டும்.

அந்தவகையில் முதல் நாளில் யோகா ஆசிரியை நந்தினி, கூடைப்பந்தாட்ட வீராங்கனையும் நடிகையுமான கெமி, மருத்துவர் திவாகர் ஆகியோர் தாங்கள் கடந்து வந்த பாதையை விவரித்தனர்.

இதில் நந்தினி பேசும்போது பெற்றோர் இல்லாத வாழ்வு எத்தனை கொடூரமானது என்பதை விவரித்தார். பள்ளிப் பருவத்திலேயே தந்தையை இழந்து, ஆண் இல்லாத வீடாக இருந்ததையும், ஆண்களால் தன் அம்மா சந்தித்த இன்னல்களையும் நினைவு கூர்ந்து வருந்தினார்.

எந்தவொரு பெண்ணுக்கும் தனது அம்மாவுக்கு ஆண்களாலும், சமூகத்தாலும் நேர்ந்த அவமானங்கள் நேரக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். ஒருகட்டத்தில் அம்மாவுக்கு புற்றுநோய் வந்துவிட்டதாகவும், மருத்துவர்களும் கைவிரித்ததால், செய்வதறியாது தம்பியுடன் அழுந்து நின்ற நாள்கள் குறித்துப் பேசினார்.

அம்மாவைக் காப்பாற்ற முடியாமல் கண் முன்பே அம்மா இறப்பதைப் பார்த்ததாகவும், அதன் பிறகு தானும் இறந்துவிட பல நாள்கள் நினைத்ததாகவும் கூறினார். ஆனால், ஒவ்வொருமுறையும் தனது தம்பிக்காக வாழ வேண்டும் என்று தேற்றிக்கொண்டு, வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

நந்தினி
நந்தினிபடம் - எக்ஸ்

பெற்றோர் இல்லாததால், உறவினர்களின் அன்பும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட நந்தினி, பாசத்திற்காக ஏங்கியபோது என் வயது ஒத்த ஆணிடம் கிடைத்த அன்பால் மயங்கி அதிலும் ஏமாற்றத்தையே கண்டதாகவும் வருந்தினார்.

எந்தவொரு நபரின் துணையுமின்றி சென்னைக்குத் தனியாக வந்து போராடிய நாள்கள் மிகவும் மோசமானது; சென்னையில் தங்குவதற்கு, அடுத்த வேளை உணவுக்கு என ஒரு பெண்ணாக இருப்பதால் நடந்த நிராகரிப்புகள் குறித்தும் பேசினார்.

உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்து வந்து சேர்ந்த இடம்தான் பிக்பாஸ் என அவர் கூறும்போது சக போட்டியாளர்கள் பலரும் கண்ணீர் மல்க அவரைப் பாராட்டினர்.

இந்த உலகை விட்டுப் பிரிந்தால், நான் வருந்துவது எனக்கு அன்பு கொடுத்த என் பூனையும் நாயும்தான் என நந்தினி கூறியது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | யூடியூபர்கள் கேவலமானவர்களா? திவாகரின் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

Summary

Bigg boss 9 nandhini emotional story

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com