பிக் பாஸ் 9: வாட்டர் மெலன் ஸ்டாரை நெஞ்சில் மிதித்த விஜே பார்வதி!

இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் காட்சிகள்.
பிக் பாஸ் வீட்டில்...
பிக் பாஸ் வீட்டில்...
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் விஜே பார்வதி, வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகரை நெஞ்சில் மிதிப்பது போன்ற காட்சி வெளியாகி, இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சி கடந்த அக். 5 ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய்சேதுபதியே, இம்முறையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிஸ் பாஸ் வீடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் சூப்பர் டீலக்ஸ் வீடு சொகுசு வசதிகளுடனும், பிக் பாஸ் வீடு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை போட்டியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், தினந்தோறும் காலை வேளையில், போட்டியாளர்களுக்கு பிக் பாஸ், டாஸ்க்(பணி) ஒன்றை கொடுப்பார். அதைப் போட்டியாளர்கள் செய்துமுடிக்க வேண்டும்.

அதில், இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் திவாகர், வாட்டர் மெலன் ஸ்டார் ஆக்டிங் அகாதெமியை நடத்தி, சக போட்டியாளர்களுக்கு நடிப்புக் கற்றுத்தர வேண்டும் என்று பிக் பாஸ் உத்தரவிட்டார்.

போட்டியாளர் துஷார் சுல்லான் படத்தில் வரும் தனுஷாக மாறி நடித்துக் காட்டினார்.

விஜே பார்வதி திமிறு படத்தில் வரும் ஈஸ்வரியாக மாறி, வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகரை நெஞ்சில் மிதித்து நடித்துள்ளார். இந்தக் காட்சிகள் முன்னோட்ட விடியோவில் வெளியாகி வைரலாகியுள்ளன.

தொடர்ந்து, விக்கல்ஸ் விக்ரம், வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்துக் காட்டினார். ரசிகர்கள் மத்தியில் நடிப்பு அரக்கன் என அழைக்கப்படும் திவாகரே, விக்கல்ஸ் விக்ரமை பிக் பாஸ் வீட்டின் நடிப்பு அரக்கன் விக்கல்ஸ் விக்ரம் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

bigg boss videos Footage from the Bigg Boss show goes viral on the internet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com