
நடிகை ரஷ்மிகா மந்தனாவின் தம்மா படத்தில் இருந்து புதிய பாடல் விடியோ வெளியாகியுள்ளது.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஹிந்தியில் தம்மா எனும் படத்தில் ரஷ்மிகா மந்தனா சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
தினேஷ் விஜயன், அமர் கௌசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள தம்மா படத்தினை ஆதித்யா சர்போட்கர் இயக்கியுள்ளார்.
மேட்டாக் ஹாரர் நகைச்சுவைப் படங்களான ஸ்ட்ரீ 2, முஞ்ஜியா படங்களைத் தொடர்ந்து தம்மா படமும் இந்த யுனிவர்ஸில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பரேஷ் ராவல், நவாசுதீன் சித்திக், பைசல் மாலிக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ரஷ்மிகா கவர்ச்சியாக நடனமாடி இருந்தார்.
இந்நிலையில், புதிய பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ரஷ்மிகா கூறியதாவது:
மொத்த படத்திலும் இந்தப் பாடல்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்திலேயே இந்தப் பாடலைத்தான் படப்பிடிப்பில் முதலிலும் கேட்டேன். தற்போதுவரை பிடித்திருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.