
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தெலுங்கில் பேசி அசத்திய விடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தற்போது நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் எனும் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதன் புரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஹைதராபாதுக்குச் சென்ற பிரதீப் ரங்கநாதன் பேசியது வைரல் ஆகி வருகிறது.
”அனைவரும் என்னிடம் மமீதா பைஜூ எக்கட? (எங்கே) எனக் கேட்கிறீர்கள்” என தனது பேச்சைத் தொடங்கினார் பிரதீப். தனது இதயத்தின் மீது கை வைத்துக் காட்டிய பிரதீப், “மமிதா பைஜூ இக்கட (இங்கே)” எனக் கூறுவார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். பின்னர், ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்த அவர், “சூர்யா 46 படத்தில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை. நாளை, நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார்” என ஆங்கிலத்தில் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.