தவறாக சித்திரிக்கப்பட்ட ஏஐ புகைப்படங்களால் மனமுடைந்த பிரியங்கா மோகன்!

நடிகை பிரியங்கா மோகனின் சமூக வலைதள பதிவு குறித்து...
Priyanka Arul Mohan.
நடிகை பிரியங்கா மோகன். படம்: இன்ஸ்டா / பிரியங்கா மோகன்.
Published on
Updated on
1 min read

நடிகை பிரியங்கா மோகனை ஏஐ உதவியினால் ஆபசமாகவும் தவறாகவும் சித்திரித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்தப் புகைப்படங்கள் போலியானவை என்றும் அதனை யாரும் பகிராதீர்கள் என்றும் நடிகை பிரியங்கா மோகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியங்கா அருள் மோகனன். தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கவினின் 9-ஆவது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இவரது புகைப்படங்களை ஆபாசமாக ஏஐ உதவியால் சித்திரித்துள்ளார்கள்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் அதனைக் கண்டித்து நடிகை பிரியங்கா மோகன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில் கூறியுள்ளதாவது:

ஏஐ உதவியால் என்னைப் போலவே போலியாகச் சித்திரித்த சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவுகின்றன. தயவு செய்து அந்தப் புகைப்படங்களைப் பகிர்வதை அல்லது பரப்புவதை நிறுத்துங்கள்.

ஏஐ பொறுப்பான படைப்பாற்றலுக்கு பயன்படுத்த வேண்டும்; தவறானவற்றுக்காக அல்ல. நாம் எதை உருவாக்குகிறோம், பகிர்கிறோம் என்பதில் கவனம் தேவை. நன்றி எனக் கூறியுள்ளார்.

Summary

Photos depicting actress Priyanka Mohan in an embarrassing and misleading manner with the help of AI are going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com