
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கிறார். இதற்கான பூஜை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார் விஜய் தேவரகொண்டா.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான கிங்டம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில், ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கான பூஜை நடைபெற்றதாக படக்குழு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.
ஏற்கெனவே, மகாநடி படத்தில் விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தாலும் நாயகன் நாயகியாக இதுவே முதல் படமாக இருக்கிறது.
மகாநடி என்ற படத்துக்காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனியான நாயகி படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் திருமணமான இவர் தற்போது பெரிய நாயகர்களின் படங்களில் நடிக்கிறார்.
கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் உப்பு காப்புராம்பு என்ற படம் வெளியானது. ரிவால்வர் ரீட்டா திரையரங்க வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.