லவ் டுடே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பிரதீப் ரங்கநாதன் திட்டமிட்டு வருகிறார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படம் மூலம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து, டிராகன் படமும் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தமிழின் முன்னணி நடிகர் பட்டியலுக்குள் இவரைக் கொண்டுவந்தது.
தற்போது, அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால் வெற்றிப்படமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “லவ் டுடே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான யோசனையும் இருக்கிறது. ஆனால், இப்போது நடக்காது. நான் வேறு கதைக்களங்களையும் எழுத வேண்டும் என நினைக்கிறேன். இவை முடிந்தபின், லவ் டுடே - 2 படத்தை ஆரம்பிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.