விஜய் சேதுபதி - புரி ஜெகன்நாத் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு!

விஜய் சேதுபதியின் புதிய பட படப்பிடிப்பு குறித்து...
இயக்குநர் புரி ஜெகன்நாத்
இயக்குநர் புரி ஜெகன்நாத்
Published on
Updated on
1 min read

நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் புரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத்துடன் இணைந்துள்ளார்.

பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள இப்படம் பெரிய செலவில் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. புரியின் தயாரிப்பு நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ‘ஸ்லம் டாக்’ (slum dog) எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளதைத் தயாரிப்பு நிறுவனம் புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளன.

இதில், சண்டைக்காட்சிகள் மற்றும் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

vijay sethupathi and puri jagganadh movie next shoots started

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com