பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மக்களைத் திரட்டி பிக் பாஸ் அரங்கத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையேயான மோதல், உள்படம்: பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடையேயான மோதல், உள்படம்: பிக் பாஸ் படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால், மக்களைத் திரட்டி பிக் பாஸ் அரங்கத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு தமிழக அரசுக்கும், முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி பிரமாண்டமாகத் தொடங்கியது. இதில் திரைப் பிரபலங்கள் உள்பட சமூக வலைதளப் பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி, தமிழர் கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இதனிடையே, தவாக தலைவர் வேல்முருகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது,

''மாணவ, மாணவிகளை பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி சீரழித்து வருகிறது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்க நெறிமுறைகள் சீரழிகிறது.

தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அண்மையில் ஒளிபரப்பிய காட்சிகள் எல்லாம் குடும்பத்தினரோடும், தாய், தந்தையிரோடும், குழந்தைகளோடு பார்க்க முடியாத அருவருக்கத்தக்கவை.

படுக்கை அறை காட்சிகளும், ஆணும், பெண்ணும் முத்தமிடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. அதில், உடலுறவு காட்சியை மட்டும் தான் அவர்கள் ஒளிபரப்பவில்லை.

இத்தகைய அநாகரிகமான நிகழ்ச்சியை நடத்தி தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்ற கேள்வி எனது மனதில் எழுகிறது. இது தொடர்பாக அறிக்கைகளும் வெளியிட்டுள்ளேன். மேலும், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் அளித்துள்ளேன்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு தமிழக அரசுக்கும், முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அனைத்து தாய்மார்களையும் திரட்டி பிக்பாஸ் திரையரங்கத்திலும், விஜய் டிவி நிறுவனம் முன்பும் போராட்டம் நடத்தப்படும். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | பிக் பாஸ்: திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா! புலம்பும் ரசிகர்கள்...

Summary

fight against Bigg Boss show Demand to ban it

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com