

ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
ஏற்கெனவே, பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ள ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளிக்கு இது ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
த்ரிஷ்யம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவானது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களையேப் பெற்றது.
ஓணம் வெளியீடாக கடந்த செப்.19ஆம் தேதி வெளியான் இந்தப் படம் தற்போது அக்.20ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கில் வெற்றிப்பெறாத சில படங்கள் ஓடிடியில் கவனம்பெற்றுள்ளன. அந்தவகையில் மிராஜ் கவனம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.