தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அம்பேத்கர் பிறந்த ஊரில் முதலிரவு! ஆண்பாவம் பொல்லாதது டிரைலர்!

ஆண்பாவம் பொல்லாதது டிரைலர் வெளியானது...

News image

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ்

Updated On :16 அக்டோபர் 2025, 6:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.

குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் வருகிற அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். திருமணத்திற்குப் பின் ஓர் ஆண் சந்திக்கும் உறவுச்சிக்கல்களை நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் காட்டிய காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரியோ ராஜும், மாளவிகா மஜோஜும் இணைந்து நடித்த ஜோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

actor rio raj's aan paavam pollathathu movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.