
பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து தப்பித்தது யார் என்பது தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் நாள்தோறும் ஒரு திருப்பம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.
அதன்படி, முதல் முன்னோட்ட விடியோவில் துஷாரின் வீட்டுத் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாக பிக் பாஸ் அறிவித்தார். இந்த விஷயத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், அடுத்த வாரம் நாமினேஷனலில் இருந்து தப்பிக்க போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறார். அதன்படி மாஸ்க் டாஸ்க் ஒன்று நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியிலிருந்து சபரிநாதன் வெளியேற்றப்பட்டதாக, முன்னோட்ட விடியோவில் பிக் பாஸ் தெரிவித்தார். சபரி வெளியேறியதைப் பார்த்து, விஜே பார்வதி துள்ளி குதித்து சந்தோஷப்படுகிறார்.
”எஃப்ஜே, சபரியைவிட கமுருதீன் எவ்வளவோ பரவில்லை. சபரிக்கு நாமினேஷன் கிடைக்காததது எனக்கு மகிழ்ச்சி” என்று பார்வதி, திவாகரிடம் கூறுகிறார்.
இறுதியாக, துஷார் மற்றும் கமுருதீனுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், கமுருதீன் வெற்றிப் பெற்று, அடுத்த வார வெளியேற்றத்தில் இருந்து தப்பித்துள்ளார்.
கமுருதீன் மீது போட்டியாளர்களுக்கு எதிர்மறைக் கருத்து இருப்பதால், இவருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்து இருப்பது போட்டியின் திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: பிக் பாஸ் அதிரடி முடிவு! துஷார் தலைவர் பதவி பறிப்பு!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.