கவிஞர் கண்ணதாசன் நினைவு நாளில் கமல் ஹாசன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான கண்ணதாசன் இன்றும் தமிழின் முதன்மையான பாடலாசிரியராகவே கருதப்படுகிறது.
இவர் அளவிற்கு பாடல்களில் தத்துவத்தையும் அழகியலையும் சேர்த்தவர்கள் இல்லை என்கிற அளவிற்கு கண்ணதாசனுக்கான இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.
இந்த நிலையில், கண்ணதாசன் நினைவு நாளான இன்று நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவு நாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும் .
எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.
என்றென்றும்
உங்கள் நான்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: டியூட், பைசன், டீசல் எப்படி இருக்கின்றன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.