
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற கிஷ்கிந்தாபுரி ஜி5 ஓடிடி தளத்தில் இன்று வெளியானது
பெல்லங்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த படம் "கிஷ்கிந்தாபுரி". இதில் தனிக்கெல்லா பாரணி, ஸ்ரீகாந்த் அய்யங்கார், ஹைப்பர் ஆதி, மக்ரந்த் தேஷ்பாண்டே, சுதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாண்டி மாஸ்டர் படத்தில் ஒரு வித்தியாசமான வில்லன் தோற்றத்தில் நடித்துள்ளார். கவுஷிக் பேகல்பட்டி இயக்கிய இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஹாரர் – திரில்லர் பாணியில் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கிஷ்கிந்தாபுரி படம் இன்று (அக்டோபர் 17) மாலை 6 மணிக்கு ஜி5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படம் தற்போது தெலுங்கில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
பிற மொழிகளில் டப்பிங் பதிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.