நிச்சயதார்த்தம் உண்மையா? வதந்தியா? ரஷ்மிகா மந்தனா பதில்!

நடிகை ரஷ்மிகா மந்தனா தனது நிச்சயதார்த்தம் பற்றி பேசியதாவது...
Rashmika and Vijay Devarakonda
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா. படம்: இன்ஸ்டா / விஜய் தேவரகொண்டா.
Published on
Updated on
1 min read

நடிகை ரஷ்மிகா மந்தனா தனது நிச்சயதார்த்தம் பற்றிய வதந்திகளுக்குப் பதிலளித்தது சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தம்மா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து கேள்வி கேட்டபோது அவர் குழப்பத்துடனும் வெட்கத்துடனும் பேசியது வைரலாகி வருகிறது.

நடிகை ரஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் எங்கும் அதிகாரபூர்வமாக பதிவிட்டதில்லை.

சமீபத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தம்மா படத்தின் நேர்காணல் ஒன்றில் இது குறித்து ரஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரஷ்மிகா குழப்பத்துடன் காணப்பட்டார். பின்னர், வெட்கப்பட்டுக்கொண்டே அவர் பேசியதாவது:

இல்லை, இல்லை. உண்மையில் நிறைய இருக்கின்றன, ஏனெனில் அவ்வளவு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் எல்லாவற்றின் சார்பாகவும் உங்களது வாழ்த்துகளை எடுத்துக்கொள்கிறேன் என்றார்.

சமீபத்தில் வெளியிட்ட விடியோவில் அவரது கையில் மோதிரம் இருந்ததும் கவனம் பெற்றது.

சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

தினேஷ் விஜயன், அமர் கௌசிக் தயாரிப்பில் உருவாகியுள்ள தம்மா படத்தினை ஆதித்யா சர்போட்கர் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.21ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Summary

Rashmika has returned to work for the promotions of her upcoming film Thamma. During an interview, the interviewer congratulated the actress but she looked a bit confused.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com