நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேநேரம், அஜித் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களிலும் கலந்துகொண்டு வருகிறார். மேலும், நரேன் கார்த்திகேயனுடன் மலேசியாவில் நடைபெறும் பந்தயத்திலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், பிரபல பான் இந்திய நடிகரான வித்யூத் ஜம்வால் நிகழ்ச்சியொன்றில், “நான் தமிழில் நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். காரணம், நான் முன்னணி நடிகராக வருவதற்கு முன்பே பில்லா காலகட்டத்தில் என்னைப் பற்றி அஜித் பேசியிருக்கிறார். அவருடன் நடிக்க விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியில் விஜய்க்கு வில்லனாகவும் மதராஸியில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்த வித்யூத் அஜித் படத்தில் இணைவாரா? பார்ப்போம்.
இதையும் படிக்க: நடிகைகள் இதற்கு மட்டும்தானா? ராதிகா ஆப்தே ஆதங்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.