ரசிகர்களைக் கவர்ந்த டியூட் சரத் குமார்!
சரத் குமார் காட்சிகள் கவனம் பெற்றுள்ளன...
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத் குமார்
டியூட் திரைப்படத்தில் நடிகர் சரத் குமார் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடித்த டியூட் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் நம்ப முடியாத அளவிற்கு பெரிய வசூலையும் செய்து வருகிறது.
உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக முதல் நாளிலேயே பிரதீப் ரூ. 22 கோடி வரை வசூலித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகர் சரத் குமார், பிரதீப்பின் மாமாவாக நடித்துள்ளார். இவரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, அவரைக் கொண்டாட வைத்திருக்கிறது.
பலரும் சரத் குமாரை இப்படி பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், சரத் குமாருக்கு 3பிஎச்கேவை தொடர்ந்து வெற்றிகரமான கதாபாத்திரமாக இப்படம் அமைந்துள்ளது.
இதையும் படிக்க: தொடர் வெற்றியில் மாரி செல்வராஜ்!
Summary
actor sarath kumar gets good response from audience
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






