தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்ல தியேட்டர்ல ஹிட் கொடுங்க... சூர்யாவைத் தாக்கிய மோகன்.ஜி!

சூர்யா குறித்து இயக்குநர் மோகன்.ஜி பதிவு...

News image
இயக்குநர் மோகன். ஜி, நடிகர் சூர்யா
Updated On :20 அக்டோபர் 2025, 8:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் மோகன். ஜி நடிகர் சூர்யாவைத் தாக்கி பேசியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான மோகன். ஜி திரௌபதி படத்தால் பரவலாக கவனிக்கப்பட்டார். அப்படம் குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக இருந்ததால் எதிர்ப்புகளையும் பெற்றார்.

தொடர்ந்து, தன் சமூகத்தினருக்கானத் திரைப்படங்களைச் சாதிய கருத்துகளுடன் இயக்குவதாக அவர் மீது ரசிகர்கள் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.

தற்போது, திரௌபதி - 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடிக்க, பான் இந்திய வெளியீடாக சரித்திர காலக்கதையாக உருவாகி வருகிறது.

Story image

இந்த நிலையில், ரிச்சர்ட் ரிஷியின் பிறந்த நாளை முன்னிட்டு மோகன்.ஜி திரௌபதி - 2 போஸ்டரை வெளியிட்டார். இதனைக் கண்ட சூர்யா ரசிகர் ஒருவர், “யாருய்யா ராஜமௌலி? தமிழ் சினிமாவோட முதல் ரூ. 1000 கோடி திரைப்படம் வருது” எனக் கிண்டலடித்தார்.

Story image

இதற்கு மோகன். ஜி, ”தியேட்டர்ல ஒரு ஹிட் கொடுங்கடா முதல்ல.. அப்பறம் என்னைக் கிண்டல் பண்ணலாம்.. வெளியீட்டுத் தேதி சொல்லுங்கடா முதல்ல..” என நேரடியாகவே சூர்யாவைத் தாக்கியுள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் மோகன்.ஜியைக் கண்டித்து வருகின்றனர்.

summary

director mohan.g directly attacks actor suriya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.