
நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
இயக்குநராகத் தன் திரைப்பயணத்தைத் துவங்கிய பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தில் நாயகனாக அறிமுகமானார். இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.
தொடர்ந்து, அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். இப்படம் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் திறமையான நாயகனாகவும் பிரதீப் மாறினார்.
ஆனால், இதெல்லாம் அதிர்ஷ்டம்தான் என்கிற பேச்சுகளும் எழுந்தன. முக்கியமாக, தோற்றத்தை வைத்து பிரதீப் தாக்கப்பட்டும் வந்தார்.
இந்த நிலையில், தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த டியூட் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
வெளியான முதல் 4 நாள்களிலேயே ரூ. 83 கோடியைப் பிரதீப் வசூலித்திருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது. காரணம், சிவகார்த்திகேயன், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களே இவ்வளவு விரைவாக ரூ. 100 கோடியைப் பெறுவதில்லை என்பதால் பிரதீப் முன்னணி நட்சத்திர நடிகராகிவிட்டார் என்றே ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
அடுத்ததாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாரான எல்ஐகே திரைப்படமும் ஹிட் அடித்தால் 2கே ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராகவே பிரதீப் மாறிவிடுவார்!
இதையும் படிக்க: காந்தாரா சாப்டர் 1 தமிழ் வசூல் இவ்வளவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.