
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தைக் கூறும் வகையில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
தெலுங்கு மொழியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கமாக தமிழில் அண்ணாமலை குடும்பம் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபகாலமாக புத்தம் புதிய மெகா தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சமீபத்தில் பாரிஜாதம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின. தற்போது அண்ணாமலை குடும்பம் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் நாள், நேரம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், தொடரின் முன்னோட்ட விடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் அண்ணாமலை என்ற பெண் உறவுகள் சேர்ந்து வாழ்வதையே பலமாகக் கருதுகிறார். தொடக்க காலத்தில் மிகுந்த சிரமத்தை சந்தித்தாலும் தற்போது பொருளாதார ரீதியாக உயர்ந்துள்ளதால், அனைவரையும் அரவணைத்து வாழ வேண்டும் என நினைக்கிறார்.
இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இதேபோன்று மற்றொடு நடுத்தர வீடு கட்டப்படுகிறது. அது அம்மா, அப்பா, இரு மகள்கள் என வசித்துவரும் தனிக்குடுத்தனம். அதில், உள்ள இளைய மகளே நாயகி. அவர் ஒற்றுமையாக இருக்க நினைப்பவர். ஆனால், மூத்த மகள் அனைத்திலும் தான் வேறுபட்டு தனித்துத் தெரிய வேண்டும் என நினைப்பவர்.
இந்த இரு பெண்களும் அண்ணாமலை வீட்டில் உள்ள இரு மகன்களை திருமணம் செய்துகொண்டு சந்திக்கும் சவால்கள் நிகழ்வுகளே அண்ணாமலை குடும்பத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் மறுஉருவாக்கமாக அண்ணாமலை குடும்பம் உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9: ஒவ்வொரு புரோமோவிலும் பார்வதி! காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.