
பிக் பாஸ் சீசன் 9 முன்னோட்ட விடியோ ஒன்று தற்போது விஜே பார்வதி இல்லாமல் வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கேலி செய்து வருகின்றனர்.
மூன்றாவது வாரத்தின் மத்தியில் அடுத்தடுத்து வந்த முன்னோட்ட விடியோக்கள் அனைத்துமே பார்வதி செய்த பிரச்னையால் அவரை மையப்படுத்தியே வந்த நிலையில், தற்போது பார்வதி இல்லாமல் முழுமையாக ஒரு முன்னோட்ட விடியோ வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் -9 ஒளிபரப்பாகி வருகிறது. 10 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 20 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் இருந்து முதல் வாரம் தாமாகவே முன்வந்து நந்தினி வெளியேரினார். முதல் வார இறுதியில் இயக்குநர் பிரவீன் காந்தியும், இரண்டாவது வார இறுதியில் அப்சராவும் குறைந்த வாக்குகளைப் பெற்றதால் வெளியேறினர்.
தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்து போட்டிகளும், போட்டியாளர்களிடையே வாக்குவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் சொகுசு வீடு எனப் பிரிக்கப்பட்டு இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், பிக் பாஸ் வீட்டின் பக்கம் சென்றுள்ள விஜே பார்வதி, வியானா ஆகியோர் சொகுசு வீட்டினர் உள்பட பலருக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலேயே விளையாடி வருகின்றனர்.
இதனால் சமீபகாலமாக வந்த முன்னோட்ட விடியோக்கள் அனைத்திலும் விஜே பார்வதி நீக்கமற இடம்பெற்றிருந்தார். தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் முன்னோட்ட விடியோவில் துஷார் - கமுருதீன் இடையிலான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இருவர் மட்டுமே முழுக்க இடம்பெற்றுள்ளதால், விஜே பார்வதி இல்லாமல் வெளியாகியுள்ள முன்னோட்ட விடியோ எனக் குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த முன்னோட்ட விடியோவில் கமுருதீன் எல்லை மீறி துஷாரிடம் நடந்துகொள்கிறார். மேலே கை வைக்க வேண்டாம் என துஷார் கோபமடைகிறார்.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறுவதைப் போன்று முன்னோட்ட விடியோவில் இடம்பெற்றுள்ளது. இதனால் பிக் பாஸ் சீசன் 9 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கெட்டி மேளம் தொடரிலிருந்து விலகிய சிபு சூர்யன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.