ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஹார்ட் பீட் - 2: ரீனாவுக்கு தெரியவந்த உண்மை... இனி நடக்கப்போவது என்ன?

ஹார்ட் பீட் - 2 இணையத் தொடரில் இனி நடக்கப்போவது என்ன என்பது குறித்து...

News image

ஹார்ட் பீட் தொடரின் காட்சி.

Updated On :23 அக்டோபர் 2025, 4:04 pm IST

ஹார்ட் பீட் - 2 இணையத் தொடரில் ரீனாவுக்கு தன்னுடைய தந்தை யார் என்பது குறித்த உண்மை தெரியவந்துள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் ஹார்ட்பீட் - 2. இந்த வெப் தொடரில் நடிகை அனுமோள், தீபா பாலு, பாடினி குமார், யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரின் கதையின்படி அனுமோளின்(ரதி) மகளான தீபா பாலுவை(ரீனா) குழந்தையாக இருக்கும்போது ரதி காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.

இதனிடையே, திடீர் திருப்பமாக ரீனாவின் தந்தை கார்த்திக்(விஜய்) கதைக்குள் வந்தார். இதனால் ரதி மற்றும் விஜய்யின் கடந்த கால வாழ்க்கையின் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெளியான எபிசோடில் விஜய்தான் ரீனாவின் தந்தை என ரதி கூறிவிடுகிறார். கடந்த கால வழக்கொன்றில் விஜய்யை, காவல் துறை கைது செய்கிறது. ரீனாவுக்கு திடீர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இப்படியாக இந்த வார எபிசோடுகள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகியுள்ளது. ரீனாவும் விஜய்யும் ஒன்றுசேர்வார்களா? விஜய்யிடம் ரீனா உண்மையை கூறுவாரா? என்பது வரும் நாள்களில் தெரியவரும்.

இன்னும் ஒருசில வாரங்களில் இந்த பாகம் நிறைவடையவுள்ள நிலையில், இந்த பாகத்தோடு ஹார்ட் பீட் தொடர் நிறைவுபெறுமா? அல்லது மூன்றாவது பாகம் தொடருமா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

Summary

In the web series Heartbeat - 2, Reena discovers the truth about who her father is.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.