நடிகர் சூரியின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தது. குறிப்பாக, கருடன் மற்றும் மாமன் நல்ல வசூலையே ஈட்டின.
சூரியை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் முன்வருகின்றன. அதேநேரம், தனக்குக் கிடைத்த தொடர் வெற்றிகள் மூலம் சூரி தன் சம்பளத்தை ரூ. 10 - 12 கோடி வரை உயர்த்தியுள்ளாராம்.
தற்போது, மண்டாடி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடற்கரை மீனவ வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சூரி தன் குடும்பத்தினருடன் ராஜாக்கூரில் உள்ள தனது இல்லத்தில் தீபாவளியைக் கூட்டுக் குடும்பமாகக் கொண்டாடிய விடியோவை இணையத்தில் பகிர்ந்தார். இது, பலருக்கும் நெகிழ்ச்சியைக் கொடுத்தது.
இதைப்பார்த்த ஒருவர், ”திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை" எனப் பதிவிட்டார்.
இதற்கு சூரி, ”திண்ணையில் இல்லை நண்பா பல நாள்கள், இரவுகள் ரோட்டில் இருந்தவன் நான்… அந்த பாதைகள்தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” எனப் பதிலளித்தார்.
சூரியின் இந்த பண்பான வார்த்தைகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வசூலித்த அறிமுக இயக்குநர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.