

ஹார்ட் பீட் - 2 தொடரின் நிறைவு நாள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹார்ட் பீட் முதல் பாகத்துக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் ஹார்ட் பீட்- 2 வெப் தொடரில் நடிகை கார்த்திக், அனுமோள், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா, பாடினி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்தத் தொடர் அனைத்து தரப்பினரையும் கவரும் தொடராக எடுக்கப்பட்டு வருகிறது. ஹார்ட் பீட்- 2 வெப் தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் எடுக்கப்பட்டு, படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், நிறைவு நாள் படப்பிடிப்பின்போது அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹார்ட் பீட் இரண்டாம் பாகம் ஒரு சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், மூன்றாவது பாகம் எடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இதையும் படிக்க: கவினின் மாஸ்க் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.