ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1!

காந்தாரா சாப்டர் 1 ஆங்கிலத்தில் வெளியாக இருப்பது பற்றி...
kantara chapter 1 poster
காந்தாரா சாப்டர் 1 பட போஸ்டர். படம்: எக்ஸ் / ஹொம்பாலே ஃபிலிம்ஸ்.
Published on
Updated on
1 min read

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1 கடந்த அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.

பான் இந்திய வெளியீடான காந்தாரா, இதுவரை ரூ. 803 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, இந்தாண்டின் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து, வருகின்ற அக். 31 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 169 நிமிடங்களாக உள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், ஆங்கில மொழிப்பெயர்ப்பில் 134 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் காந்தாரா சாப்டர் 1 பெற்றுள்ளது.

Summary

Kantara Chapter 1 to be released in English

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com