

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் 1, அக்டோபர் 31 ஆம் தேதியில் ப்ரைம் ஓடிடி தளத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தின் தொன்மம், கடவுள், நில அரசியலை மையமாக வைத்து உருவாகிய இந்தப் படம் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் முன்னோக்கிய கதையாக சாப்டர் 1 என்ற பெயரில் இந்தப் படம் அக்.2 ஆம் தேதி வெளியானது.
பான் இந்திய வெளியீடான காந்தாரா, இதுவரை ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, இந்தாண்டின் பெரிய வணிக வெற்றியைப் பெற்ற படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.
மேலும், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் காந்தாரா சாப்டர் 1 பெற்றுள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் புதிய படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.